Clicky

பிறப்பு 21 OCT 1969
இறப்பு 31 JAN 2026
திருமதி சினோவதனி வசந்தகுமார்
வயது 56
திருமதி சினோவதனி வசந்தகுமார் 1969 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்புள்ள சித்திக்கு
Mrs Sinovathany Vasanthakumar
யாழ்ப்பாணம், Sri Lanka

அன்புள்ள வதனி சித்திக்கு, உங்களை இழந்த இந்த உண்மையை இன்னும் நம்ப முடியவில்லை. இது ஒரு கனவாகவே தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போராடியதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். குட்டி சித்தாவில் நீங்கள் வைத்திருந்த அளவில்லா அன்பை நாங்கள் அனைவரும் கண்டு ரசித்தோம். தனு மற்றும் ஜிது மீது நீங்கள் காட்டிய அன்பும் பாசமும், அவர்களை நீங்கள் வளர்த்த விதமும் எங்கள் கண்களுக்கு முன்பே இருக்கின்றது. இன்று நீங்கள் அவர்களையும், எங்களையும் விட்டு சென்றது ஏன்? உங்கள் பிரிவால் இன்று நாங்கள் அனைவரும் துடிக்கிறோம். நீங்கள் செய்த போராட்டம் அர்த்தமின்றி போய்விட்டதே என்று மனம் ஏங்குகிறது. ஆனால் எங்களுக்குத் தெரியும்— ‘புற்றுநோய்’ என்ற கொடிய நோயால் நீங்கள் அனுபவித்த வேதனைகள். அந்த வேதனைகளிலிருந்து இன்று நீங்கள் விடுதலை பெற்றிருக்கிறீர்கள். இங்கு உங்களை இழந்து துடிக்கும் சித்தாவும், உங்கள் செல்லக் குட்டிகளும் உடைந்து போய் நிற்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் உங்கள் ஆசீர்வாதம் தேவை. இப்போதும் உங்கள் நித்திரையிலும் கூட நீங்கள் அவர்களைப் பற்றியே மட்டும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும். வதனி சித்தி, உங்களுடன் பழகிய அனைத்து உறவுகளும் இன்று உங்கள் இழப்பால் துயரில் மூழ்கியுள்ளோம். எங்களுக்கெல்லாம் எப்போதும் துணையாக இருந்து வழி காட்டுங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம். உங்கள் நினைவுகள் எங்களை கடைசி வரை தொடரும். 🌸

Write Tribute