யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Mount Claremount ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா சிவபாதம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் கணவருக்கு, அப்பாவுக்கு
எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
பிறர் கேளாமல் உதவி செய்வதில்
உங்களை மிஞ்ச இந்த உலகில் யாரும் இல்லை
உதவி செய்வதில் நீங்கள் தர்மன் ஐயா....
மதத் தடைகளைப் பொருட்படுத்தாமல்
அவரது அயராத தன்னார்வப்
பங்களிப்பு பாராட்டக்குரியது
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள்
என்றும் எம்
மனங்களில் வாழுதையா!!!
பத்தாண்டுகள் சென்றிருந்தால்
என்ன
ஐயா உங்களின் பார்வையும்
தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி அரவணைத்து பேணிக்
காத்த
எம் தெய்வமே!
அலை அலையாய் வரும்
கடல் கூட
வெயிலில் வற்றி விடும்.
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு என்னை
பித்தம் கலக்க வைக்கிறது...
பத்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.