

யாழ். கரணவாய் கிழக்கு விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பாலசிங்கம் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
குலமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலநந்தினி(சுவிஸ்), பாலாம்பிகை(லண்டன்), பாலச்சந்திரன்(சுவிஸ்), பாலேந்திரன், காலஞ்சென்ற பாலஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலரதி, விமலரதி, கமலநாதன் மற்றும் விமலநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற யோகநாதன்(சுவிஸ்), பரமேஸ்வரன்(லண்டன்), யாழினி(சுவிஸ்), உமா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற போமன் கிட்டினப்பிள்ளை அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
வசீகரன்(சுவிஸ்), ரம்மியா, அஜித் கபிலாஸ், கீர்த்தனா, ஜனந்தன், இஷா கோபிகன் , அபிஷாந்த், டனோசிகா- கிருஷாணி, கம்சா, யஸ்மினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.