யாழ். கொம்மந்தறை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை தவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:06/03/2023.
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை
நோகவிட்டு
சென்றுவிட்டீர்கள்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை நெஞ்சம்
எல்லாம் வலிகளுடன் நிஜங்களைத்
தேடுகின்றோம் நிஜம் தானா
என்று
எண்ணி நித்தமும்
தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில்
பயிர்கள் துளிர்விடும்
எங்கள்
விழிகள் சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை
கண்டிட முடியாதோ....
ஓராண்டு ஓடி
மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் மனதில்
என்றென்றும்
நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.