யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
மாதம் ஒன்று கடந்து விட்டன!
பலமான காற்றைப் போல
உன் மரணமும் எங்கள்
குடும்பத்தை துண்டு
துண்டாக உடைத்தது!
ஆனால் நம் உள்ளங்களில் இருக்கும்
உங்கள் இருப்பை முன்னோக்கி செல்வதற்கு
பலத்தையும் தைரியத்தையும்
எங்களுக்கு அளித்தது!
எத்தனை நாட்கள் மாதங்கள் அல்லது
வருடங்கள் கடந்து இருந்தாலும்
நீங்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை
எப்போதும் முழுமையானதாக இருக்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06:00 மணிக்கு கீரிமலை தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 22-10-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது, அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத்தொரந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் சாந்தி சாந்தி