யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதி மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை முத்துலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும்,
நேசத்திலும் எங்களை மகிழ்வித்து
எனது அன்பிற்கினிய கணவனாக
உமது குழந்தைகளுக்கும் ஒளிகாட்டியாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே
ஆலமரத்தில் அழகாய் கூடுகட்டி அதில்
பாசமழை பொழிந்து பகலிரவாய்
பாடுபட்டு பண்போடு காத்து வந்த
எங்களை பாதியில் விட்டுப் பிரிந்தது ஏனோ அப்பா
அன்புள்ள தாத்தாவே
உங்களைப் போல் ஒருவரை நாம் சந்தித்ததில்லை
அன்பில் அறிவில் ஆற்றலில் உங்களுக்கு
நிகர் நீங்களே உங்கள் நினைவுகள்
என்றும் எம் இதயத்தில் நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Rest in peace uncle