
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாதேவன் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மாதேவி(இலங்கை), சரோஜாதேவி(இலங்கை), இராகுலன்(சுவிஸ்), இராகவன்(சுவிஸ்), ஈஸ்வரன்(ஜெர்மனி), தூயவன்(லண்டன்), சுதர்ஷினி(சுவிஸ்), மகிழ்மணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், கனகம்மா, மங்கையர்க்கரசி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜன்(இலங்கை), ஜெயக்குமார்(இலங்கை), அமராவதி(சுவிஸ்), அஜந்தா(ஜெர்மனி), ஜானகி(சுவிஸ்), தயாநிதி(லண்டன்), ஜெயரஞ்சன்(சுவிஸ்), யோகச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்