
அன்புள்ள குடும்பத்தினருக்கு, என் மனமார்ந்த அனுதாபங்கள் உங்கள் அனைவருக்கும். நான் அமரர் திரு. சின்னத்துரை கணேஸ்ஜயா வை 53 ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்துகொண்டேன். அந்த காலத்தில் எங்கள் குடும்பம் வறுமையில் இருந்தாலும், அவர் எப்போதும் எனக்கு அன்பும், பராமரிப்பும் கொடுத்து வந்தார். வைத்தியர் கணேஸ்ஜயா அவர்கள் எங்களுக்கு மரியாதையுடன் மட்டுமின்றி, நெஞ்சார்ந்த சேவைகளை தரும் மருந்துகளின்மூலம் திருப்தியடைந்தோம். இது அவரின் முகத்தின் ராசிக்கு சான்று பகிரும். ஆதனால் நோய்களும் ஓடி விடும். அவர் என்னுடன் எப்போதும் அன்போடு இருந்தார், நான் அதை எப்போதும் மறக்கமுடியாது. இப்போதும் நான் அவரின் பெயரை என்றும் நினைவில் கொண்டிருந்தபடியால் அன்னாரின் மரண அறிவித்தலை பார்த்ததும் பழைய நினைவுகள் பின்னோக்கி சென்றன. அவரின் மருத்துவ சேவை, அன்பு, உழைப்பு என் வாழ்கையில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் அற்புதமான வாழ்க்கை மற்றும் பணிகள் நமக்கு நிச்சயமாக வழிகாட்டி ஆகும். இந்த கவலையான நேரத்தில், உங்களுடன் என் ஆழ்ந்த ஆறுதலை பகிர்ந்துகொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி பெறவேண்டும் என நான் மனதார பிரார்த்திக்கின்றேன். அன்புடன், சிறிசுப்பிரமணியம் ரவிசங்கர்