யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கமலம் அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார், இராஜ்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னம்மா, நடராஜா, நாகம்மா, சண்முகம், தங்கராணி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா மற்றும் இராமலிங்கம், காலஞ்சென்ற நாகம்மா மற்றும் அப்புத்துரை காலஞ்சென்ற சின்னப்பொடி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரமணி, உமாரசிகா, இளநங்கை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பானுசன், தனோசன், லக்சியா, அனன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...