

யாழ். அளவெட்டி வடக்கு அம்பாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Scunthorpe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி சின்னத்துரை பாலச்சந்திரன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று Sawbridgeworth, Hertfordshire இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பான மூத்தமகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஞ்சலி, தயாளன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Benjamin அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலயோகினி, பாலசுந்தரி, பாலசந்திரேஸ்வரி, பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தில்லைநாதன், காலஞ்சென்ற இமயவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ரத்தினம், வாமதேவன், ரவீந்திரன், வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜனி, ரவி, ரகுலன், ரமணி, தமிழினி, வலவன், விறலோன், சுடரோன், மைவிழி, பாவை ஆகியோரின் அருமை மாமனாரும்,
லாவண்யா, மாலவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லில்லி லக்ஸி, லுய்(Louis), பாலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று Stevenage, Hertfordshire இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இறுதிக்கிரியைகள் குடும்ப அங்கத்தினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.