Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 JUN 1934
மறைவு 04 JUN 2024
திரு சின்னத்துரை பாலராஜா
வயது 90
திரு சின்னத்துரை பாலராஜா 1934 - 2024 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை தம்பலகாமத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலராஜா அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்து சின்னத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மினி(இலுப்பைக் கடவை- சுவிஸ்), வசந்தினி(உடுவில்- சுவிஸ்), விஜேந்தினி(கனடா), சிவானி(சுவிஸ்), ஐராகினி(கனடா),  காலஞ்சென்ற முகுந்தன், தாரணி(சுவிஸ்), கீத்தா(ஐக்கிய அமெரிக்கா), முகுந்தன்(தம்பலகாமம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமிர்தலிங்கம், ஜெகதீசன், அம்பிகாநிதி, சாந்தலிங்கம், லோகநாதன், ஜெயகாந்தன், சிவசுந்தர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, பாலசிங்கம்(கல்வியங்காடு), சறோஜினிதேவி(மருதனார் மடம்), ஜெயமலர்(கொழும்பு), காலஞ்சென்ற சாரதாதேவி, ஜெகஜோதி(ஜோய்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மங்கையர்கரசி, பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கல்யானசுந்தரேசன்(மருதனார் மடம்), நித்தியானந்தன்(கொழும்பு), காலஞ்சென்ற தர்மசீலன்(அளவெட்டி மருதனார் மடம்), புஸ்பநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகா, ஆதவன், கௌதமன், பவித்திரா, அஷாந், அஞ்சுதா, விபுஜா, யஷாந், சங்கவி, சுபோதன், செந்தூரன், அச்சுதன், ஹரிகரன், ஹம்ஷத்வன், காயத்திரி, புருசோத்தமன், ஷாலினி, மிதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜானகி, வெற்றி, இசை ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மானிப்பாய் வீதி, சிங்கம் ஒழுங்கை, உடுவில் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தினி(சுதா) - மகள்
தாரணி(கிருஸ்னா) - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivani Santhalingam

RIPBOOK Florist
Switzerland 3 weeks ago

Photos

No Photos

Notices