Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1946
இறப்பு 15 JAN 2021
அமரர் சின்னத்தம்பி விக்கினராசா 1946 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனையிறவு, இரத்தினபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி விக்கினராசா அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வதிரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், ஆனையிறவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் மகேஸ்வரி(சின்னக்கா, இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மதேவி(இராசாக்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குகதாசன்(தாஸ்- பிரித்தானியா), அஜிதா(பிரித்தானியா), அபிரா(இலங்கை) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற இராமகிருஸ்ணராஜா, பாலசுப்பிரமணியம், நவமணி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுசலா(பிரித்தானியா), கதிர்காமநாதன்(சிறி- பிரித்தானியா), குகாநந்தன்(குகன்- நோர்வே), சுரேஸ்(குட்டி- கனடா), சுபாஜினி(கனடா), தாட்ஷாஜினி(கனடா), முருகானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), ஜீவானந்தன்(ஜீவா- பிரித்தானியா), கிருபானந்தன்(இலங்கை), பத்மரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சிவராஜன்(ராசன்- பிரான்ஸ்), சேத்திரபாலன்(சேத்தி- பிரான்ஸ்), சேத்திரகுமார்(பவா- பிரான்ஸ்), சத்தியபாமா(பாமா- பிரான்ஸ்), சத்தியநாதன்(நாதன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

பர்வதம், யோகமணி, சிவஞானம், பரமேஸ்வரி(இராசத்தி- கனடா), சூரியகுமார்(செல்வம்- பிரித்தானியா), பத்மநாதன்(இலங்கை), சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கேமச்சந்திரன், சிந்தனைச்சோதி(ரூபி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, வள்ளிநாயகம்பிள்ளை ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

ரதிதேவி(நோர்வே), சுதர்சினி(கனடா), பாலரூபன்(ரூபன்- பிரித்தானியா), பாலமுரளி(முரளி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கஜானி, மயூரன், திவ்யா(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும்,

வினோஜா சுவேதா, குணேஸ், வைஸ்ணவி, கிரிஷ்(பிரித்தானியா), மதுசாளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை  இல 79/2 Seastreet, Negombo எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்