Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1925
இறப்பு 24 FEB 2019
அமரர் சின்னதம்பி செல்வநாயகம்
Former General Manager Autodrome - Tucker, Colombo
வயது 93
அமரர் சின்னதம்பி செல்வநாயகம் 1925 - 2019 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புலோலி தெற்கு பூங்கொடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி செல்வநாயகம் அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நொத்தாரிசு கந்தப்பர், நாகமுத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் முதலியார்(ஸ்தாபகர்- Victoria கல்லூரி, சுழிபுரம்) செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரட்ணலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(ஐக்கிய அமேரிக்கா), பிரியதர்ஷினி(கனடா), சுபாஷினி(கனடா), சாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அங்கயற்கண்ணி, சிவசண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகைநாச்சி, பராசக்தி, Dr. ரட்ணவேல், ரத்னேஸ்வரி, மகேஷ்வரி, ரத்தினசபாபதி(இளைப்பாறிய கல்லூரி பணிப்பாளர்), Dr. நடேசரட்ணம், கனகரட்ணம் மற்றும் சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலா(ஐக்கிய அமெரிக்கா), மகேந்திரராஜா(கனடா), சுகுமாரன்(கனடா), குமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜன்(ஐக்கிய அமெரிக்கா), அனிதா(ஐக்கிய அமெரிக்கா), கிருஷாந்(கனடா), செஷாந்(கனடா), அர்ஜூன்(கனடா), அரவிந்(கனடா), ரோஷ்னி(கனடா), கேஷ்னி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices