அன்பின் சுந்தரலிங்கம் மாமாவிற்கு, அம்மா இன்று துயரமான இச்செய்தியைச் சொன்ன போது, என்னால் முதலில் நம்ப முடியவில்லை. ஏனேனில் மிகவும் உற்சாகமாக உங்கள் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் நீங்கள். எங்கள் அப்பாவிற்கும் உங்களிற்குமான பழக்கம் நீங்கள் பரந்தன் இரசாயன உற்பத்திசாலையிலும் அப்பா ஆனையிறவு உப்பளத்திலும் வேலை பார்க்கும் நாட்களிலிருந்து தொடர்கிறது. கனடாவில் எங்கு நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் ஆதராவான அட்டகாசமான சிரிப்பொலிகளோடு தொடங்கும் கதைகள் மணிக்கணக்கில் தொடரும். எங்காவது கட்டிலோ அல்லது கதிரைகளிலோ அமர்ந்து நீங்கள் இருவரும் கதைக்கும் விதம் தாயகத்தை கண்முண் நிறுத்தும். அவ்வளவு அழகானதும் அன்பானதும் உங்கள் நட்பு. நாட்டைப் பற்றி, உங்கள் பழைய காலங்கள் பற்றி பலதும் கதைப்பீர்கள். பார்த்து மிகவும் மகிழ்ந்திருக்கிறேன், நெகிழ்ந்திருக்கிறேன். அப்பாவின் மறைவிற்குப்பின்னர் எங்களோடும் அதே பாசத்தோடும் அன்போடும் பழகுவீர்கள். இந்தமுறை கோடைகாலத்தில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. இப்போது இந்தச் துயரச் செய்தி கடினமாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் எம்மோடு பலகாலம் வாழ்வது எமக்குத்தான் மிகவும் ஆறுதல் தரும் விடயம். இன்று உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உங்கள் சகோதரங்கள். அவர்களின் பிள்ளைகள், உங்கள் இனிய நண்பர்கள் எல்லோரிற்கும் எல்லாம் வல்ல இறைவன் துணையிருந்து அவர்களின் மனதைத் தேற்ற வேண்டும் என்று வேண்டுக்கொண்டு உங்கள் இனிய அன்பான ஆத்மாவின் இனிய பயணம் மேலுகில் தொடர்கிறது என்ற ஆறுதலுடன், அன்புடன் பொன்னுத்துரை குடும்பம் மனைவி, பிள்ளைகள் ( குமணன், குமுதினி, அமுதினி), மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
Accept our Deepest Sympathy! Our family will not forget Uncles Gentlemen-ship! Durairajah Nanthacumar Family