கனடாவிலும் என்னுடைய தந்தையாருடன் தன்னுடைய நட்பை பேணிவந்தவர், தொலைபேசியில் கதைக்கின்ற போதிலெல்லாம், முதலில் “தம்பி எப்படி இருக்கிறீர்கள்” என்கிற வாஞ்சையான வார்த்தைகளின் பின்னரே எடுத்த விடயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார். 2017ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 7ஆம் திகதி நடந்த 94ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரி நண்பர்களின் குடும்ப ஒன்றுகூடலில், எமது காலத்தில் கல்வி கற்பித்த பத்து ஆசாரியர்களை அழைத்து கௌரவித்த நேரத்தில், அமரர் சி. சுப்பிரமணியம் ஐயாவையும், அவர் வாழும்போதே கௌரவித்து, அவரது ஆன்மாவை ஆனந்தப்படுத்தி இருந்தோம், அந்தளவில் இன்றும் அவரது ஆனந்தமான அந்த அனுபவத்தை கொடுத்த எங்களுடைய 94 நண்பர்கள் சார்பில், எங்களுடைய ஆன்ம அமைதிக்கான பிரார்த்தனையை மேற்கொள்ளுகிறோம். என்னுடைய தனிப்பட்ட மரியாதையும், அவருக்கான பிரார்த்தனையையும், அமரர் சி. சுப்பிரமணியம் ஐயாவின் ஆன்மாவின் பயணத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன். நன்றி.
Dear Mahesh and family , pls accept my deepest condolences. RIP