

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சின்னத்தம்பி நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா நித்திய லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தன்(பிரான்ஸ்), உஷா(நோர்வே), சிறீதரன்(ஆசிரியர் விசுவமடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கைலாயர்(தபால் உத்தியோகத்தர் ஆவரங்கால்), சேனாதிராசா(ஆவரங்கால்), சேதுபதி(தெல்லிப்பழை) மற்றும் திருஞானசம்பந்தர்(மீசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தெய்வமோகனா(பிரான்ஸ்), முருகதாசன்(நோர்வே), பவித்திரா(ஆசிரியை உடையார்கட்டு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசலச்சுமி, இராசேஸ்வரன் மற்றும் இராசகுலேந்திரன்(இலங்கை), செல்வராசா செல்வராணி(இலங்கை), கனகராசா திலகராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குபேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷிகா(பிரான்ஸ்), யதுர்சிகன்(பிரான்ஸ்), திலக்ஷன்(நோர்வே), றதுஷன்(நோர்வே), திலக்ஷிகா(விசுவமடு மகாவித்தியாலயம்), திலக்ஷிகன்(விசுவமடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.