
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவானந்தம் அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அசுபதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவறஞ்சினி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
வசித்தா(சுவிஸ்), நிறஞ்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிகரன்(கிரி- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தங்கேஸ்வரி(இலங்கை), அருளானந்தம்(சுவிஸ்), செல்வானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானசேகரம்(இலங்கை), புஸ்பறதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவயோகம்(இலங்கை), சிவமலர்(இலங்கை), சிவறாகினி(இலங்கை), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற குமாரசாமி(இலங்கை), துரைராசா(இலங்கை), செல்வசந்திரன்(இலங்கை), சிந்துஜா(சுவிஸ்) ஆகியோரின் சகலனும்,
நிறோசன்(அவுஸ்திரேலியா), வைஸ்ணவி, சங்கவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுசன், அபித்தா, அபினயா(சுவிஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
அதிஷா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.