5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி செல்லம்மா
1930 -
2015
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி செல்லம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
எங்கே? உன் தாய் மடியம்மா
ஐந்து ஆண்டு போனாலும்
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
ஈசனவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்.
தகவல்:
குடும்பத்தினர்