

-
23 MAR 1955 - 18 JAN 2021 (65 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மட்டுவில் தெற்கு, Sri Lanka சாவகச்சேரி, Sri Lanka
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாவும், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டிருந்த சின்னத்தம்பி நவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்.
ஏட்டில் எழுத முடியவில்லை - எம்
இதயத்து வேதனையை....
பாட்டிலும் பாடிவிட- தமிழ்
வார்த்தைகளே வரமறுக்கின்றன.....
காலங்கள் உருண்டோடி
கலைந்து சென்றாலும்
நிலையாக எம் மனங்களில்
நிச்சயமாய் நீங்கள் இருப்பீர்கள்!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அஸ்திம கிரியைகள் 17-02-2021 புதன்கிழமை அன்று கீரிமலையில் இடம்பெறும். வீட்டுக் கிரியைகளும், மதிய போசனமும் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். அனைவரும் கலந்தி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Summary
-
மட்டுவில் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
