கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமரேஸ்வரன் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்பிற்கு இலக்கணமாய் அவணியில் வாழ்ந்து
பண்புடமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் இருந்தீரே
நிலையில்லா வாழ்வினிலே நீங்காத நினைவுகளை பதித்து
பாசம் காட்டி உறவினர்களை, நண்பர்களை பரிதவிக்க விட்டு
இனிக் காணா இடம் தேடி எங்கு தான் சென்றீரோ
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டீர்
கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர்ப்பூக்களால்
உங்கள் ஆத்மா சாந்தி பெற காணிக்கையாக்குகின்றோம்
தாங்கமுடியாத துயரத்தில் தவிக்குதையா எம் மனசு
அமைதியாக துயிலும் உங்கள் ஆன்மா இறைபதம் சேர
இறைவனை இரங்கி இறைஞ்சிகின்றோம்...