யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அரியரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே அப்பா
ஆண்டு ஒன்று ஆனதுவோ.
அப்பா என்றழைக்க உள்ளம் துடிக்குதப்பா
அழுதழுது தேம்புகிறோம் உங்களைக் காணாது
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்போடு
அணைக்க ஊங்களைப் போல் யாருளரோ
கண்ணை இமை காப்பதுப்போல் எமை அன்போடு
அணைத்துப் பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டி வளர்த்தீர்களே அப்பா.
உங்களின் ஆசைமுகம் காணாது ஒவ்வொரு நொடியும்
தவிக்கின்றோம் அப்பா கண்ணீரில்
பார்க்கும் இடமெல்லாம் உங்கள் நினைவுகளாய்த்
தெரிகிறதே அப்பா
இவ்வளவு அவசரமாய் எமைத்தவிக்கவிட்டு
எங்கு சென்றீர்களோ அப்பா
எம்மால் நம்ப முடியவில்லை உங்களின் பிரிவை!....
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Our deepest condolence