யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னதம்பி செல்லத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாண்புறு மத்தெணி மண்ணிர் மலர்ந்தவர்
பனிபொழிசூழ் நோர்வே மண் வாழ்ந்தவர்
கூற்றுவன் வஞ்சத்தால் வீழ்ந்து மடிந்தவர்
அமரர் பதி அல்பா செற்றில்
மீளாத் துயில்கொள்கிறார்
அன்புள்ள அப்பா!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!
இருபது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..