Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUN 1948
இறப்பு 11 NOV 2018
அமரர் சின்னத்தம்பி இரத்தினம்
ஓய்வுநிலை உதவிப் பொலிஸ் பரிசோதகர்
வயது 70
அமரர் சின்னத்தம்பி இரத்தினம் 1948 - 2018 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரத்தினம் அவர்கள் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததிதேவி(ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்- வலயக் கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு) அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தன்(ஐக்கிய அமெரிக்கா), காயத்திரி(ஆசிரியை- வவுனியா கோயிற்குளம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாரணி(ஐக்கிய அமெரிக்கா), துஷ்யந்தன்(சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெயமாலினி, தங்கராசா, சிவப்பிரகாசம், மகேசன், மகேந்திரன், குகதாசன், சிறிதரன், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயராணி, ஜெகதீசன், விமலாதேவி, சிறீதரன், இந்திராதேவி, றதிதேவி, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தோஷ், ஷபீனா, மெளனிஷன், வர்ணிஷன், ஜானுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆதி விநாயகர் கோயிலடி, வைரவப்புளியங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices