யாழ். பருத்திதுறை கந்தரோடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-03-2023
அன்பின் இலக்கணமாய்
பாசத்தின் பெட்டகமாய்
கண் இமைபோல் எங்களை
காத்து நின்ற ஐயாவே!
விண்ணகம் நீர் சென்றதேனோ?
கண்களில் நீர் சுமந்தோம்
எண்ணத்திலே உயர்ந்தவரே!
சிரித்த முகம் என்று காண்போம்?
நீங்கள் எங்களை விட்டு
நீண்டதூரம் சென்றாலும் உங்கள்
ஆசைமுகம் எங்கள் நெஞ்சில்
நிலைத்திருக்கும்!
உங்களோடு வாழ்ந்த நாட்கள்
திரும்பி வராதா என்று
எண்ணித் துடிக்கிறோம் ஐயாவே!
ஆறாத துயரோடு அணையாத
தீபத்தைப்போல் உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
உங்கள் பிள்ளைகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மீனலோஜினி(டென்மார்க்), புவனலோஜினி(இலங்கை), இராஜசுலோஜினி(ஜேர்மனி),
சிவா(நோர்வே), பிராபாகரன்(கனடா), குசலலோஜினி(கனடா)