Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 SEP 1940
இறப்பு 27 JUN 2026
திரு சின்னத்தம்பி இராமநாதன்
வயது 85
திரு சின்னத்தம்பி இராமநாதன் 1940 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 46 பெரியகுளம் கண்டாவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராமநாதன் அவர்களின் அந்தியேட்டி கிரியையும், நன்றி நவிலலும்.

கண்ணில் நிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்தக் கண்ணீர் வடித்து
தேடுகின்றோம் எங்கு
சென்றீர்கள் அப்பா?

பிள்ளைகள் சோர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?

காலங்கள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!
 நாட்கள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் மாறாது
மாதம் ஒன்று கடந்தாலும்
எங்கள் ஆளாக்கிய அப்பா
உங்களை எப்படி மறப்பது!

உங்கள் 
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று மு.ப கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 08-08-2026 சனிக்கிழமை எமது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அவரது ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute