யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா நாகலிங்கம் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
வேல்வேந்தன், குமாரவேந்தன்(குமார்), சுதாராணி(ராசாத்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகம்மா, இராசம்மா, லோகநாதன் மற்றும் பத்மநாதன், நாகேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாதேவி, தயாநிதி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, விதுரன், அன்டெர்சன், அக்சயா, லியோனி, விசாலி, சரளன், வாரகி, டியோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.