
திதி: 05-09-2025
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, ஜேர்மனி Wuppertal ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சின்னர் செல்லத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
“1 ஆம் ஆண்டு நினைவுவணக்கம்”
பப்பா ! எம்மை விட்டுச் சென்று
ஆண்டு ஒன்றும் ஆனதே!
அன்னம் ஊட்டி அழகு தமிழ் பழக்கி,
எண்ணத்தில் நல்லன விதைத்து
பகிர்ந்துண்ணும் பழக்கத்தை எம்முள் பதித்து
இப்பாரில் வாழும் வாழ்வுக்கு
உகந்தோராய் உருவாக்கிய பப்பா!
நீங்கள் எம்மைவிட்டு அம்மாவைக்காண விண்ணுலகம் சென்று
ஆண்டு ஒன்று ஆனது பப்பா!
காலத்தாலும் அழிக்க முடியாது உங்கள் நினைவை.
எங்களது மனங்களிலும் எங்கள்
பிள்ளைகள் மனங்களிலும் என்றும்
நிறைந்திருப்பீர்கள் பப்பா!
அகவை 92வரை பூவுலக வாழ்வை
அழகாய் வாழ்ந்து எமக்கு
நல்வழிகள் காட்டிய பப்பா!
நெகிழ்வோடு நினைக்கின்றோம்
எங்கள் பாசம் நிறைந்த பப்பாவை!
இறையாய் மாறிய பப்பா அம்மாவுடன்
இணைந்திருந்து எம்மைக் காப்பீர்கள்.
நன்றி பப்பா!