Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1941
இறப்பு 26 FEB 2025
திரு சின்னப்புநாயகம் மரியசேகரம்பிள்ளை
தூய சம்பத்திரியார் கல்லூரி மற்றும் கட்டுபெத்த சர்வகலாசாலையின் பழைய மாணவர், இலங்கை தபால் தந்தி தொலைபேசி திணைக்கள பணியாளர், ஓய்வுபெற்ற விரிவுரையாளர் Dubai, Sharja Eltisalt
வயது 83
திரு சின்னப்புநாயகம் மரியசேகரம்பிள்ளை 1941 - 2025 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு, கொழும்பு, நாரந்தனை, சார்ஜா (UAE), அவுஸ்திரேலியா மெல்போன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  சின்னப்புநாயகம் மரியசேகரம்பிள்ளை அவர்கள் 26-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மெல்போனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ச. சின்னப்புநாயகம் அகத்தா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் மாகிறேட் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற கிளாறா சோதி மரியசேகரம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. மக்சி சத்தியன் மற்றும் யூலியா கோசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Audray, Tristan, and Kieran ஆகியோரின் பாசமிகு பேரனும்,

புஷ்பராணி, ராஜேஸ்வரி, கமலராணி, காலஞ்சென்ற சவுந்தரநாயகம், செல்வநாயகம், விமலராணி(விமோ) ஆகியேரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தவேந்திரன், மகேந்திரன், ஜித்தேந்திரன், பிலோமினா மற்றும் தனேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Melbourne ல் உள்ள Tamil Catholic Association of Victorio ல் பல வருடங்களாக தலைவராக சேவை புரிந்தவரும் தமிழர் நலன் சார்ந்த பல உதவிகள் புரிந்தவரும் திருமறைக் கலாமன்றம் மூலம் பல நாட்டுக் கூத்துக்களை மேடையேற்றியவரும் என கத்தோலிக்க சமயத்திற்கும் தமிழுக்கும் நற்சேவையாற்றியவர் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr. மக்சி சத்தியன் - மகன்
ராணி முருகேசு - சகோதரி
ராஜேஸ் ஜெயசிங்கம் - சகோதரி
விமோ - சகோதரி
செல்வா - சகோதரன்
Dr. நிக்சன் - மருமகன்

Photos

Notices