யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு செல்வரத்தினம் அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரஜனி(சுமதி), பிரபலாதன்(சிவா- சுவிஸ்), திருமகள்(நிதி- கனடா), காலஞ்சென்ற சசீதரன் மற்றும் கஜிகரன்(தீபன்), வசீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபேந்திரராஜா, சிவமலர், நாதன், ராஜினி, மகிழினி ஆகியோரின் அன்பு மாமனும்,
சரஸ்வதி, நடராஜா, நல்லம்மா, குணமணி, காலஞ்சென்ற கெங்காதரன் மற்றும் சற்குணநாதன், நல்லையா(ஜேர்மனி), பவளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனோஜன், சங்கவி, ஜனனி, சயித்தன், பிருந்தன், பிரவிந்த், சிபிதன், ஆத்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.