Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 DEC 1955
இறப்பு 31 DEC 2024
அமரர் சின்னப்பு பிரேமநாதன்
ஓய்வுபெற்ற முகாமையாளர் - ப.நோ.கூ.சங்கம் அச்சுவேலி
வயது 69
அமரர் சின்னப்பு பிரேமநாதன் 1955 - 2024 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு பிரேமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் சின்னப்பு பிரேமநாதன் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06.30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்தியக்கிரியை 30-01-2025 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தாங்கள் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
பேக்கரி வீதி,
புத்தூர் கிழக்கு, புத்தூர். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்