யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-12-2022
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
ஆண்டு பத்து ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது ஐயா,
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த ஐயா
ஆண்டு பத்து கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் ஐயா
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் ஐயா
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்களை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை ஐயா
நீங்கள் எம்மைவிட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா
உங்கள் ஞாபகங்களுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.