
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா கனகம்மா அவர்கள் 01-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா சின்னப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தநடராஜா(J.H.C இளைப்பாறிய N.H.D.A கணக்காளர்), ரவிக்குமாரன்(J.H.C இளைப்பாறிய சுங்க திணைக்கள அதிகாரி), சிவக்குமார்(J.H.C- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி, சசிகலா, லட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, தங்கமுத்து மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிசாந், நிரோஷினி, வைஷ்ணவி, ரம்யா, வெங்கடேஸ், விக்னேஸ், மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கம்பல் பிளேஸ் எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.