யாழ். இளவாலை வசந்தபுரத்தைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Beelen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னாண்டி ஆறுமுகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிமைக்கும் நேரத்தில்
நீண்ட காலஞ்சென்றதையா
காலன் கயிறு உன் கழுத்தில்
வந்து விழுந்து வருடமொன்றும் ஆனதையா!
நேற்று நடந்த சம்பவம் போல்
நினைவலைகள் எம் கண்முன்னே
யாருமற்ற அநாதைகள் போல்
எம் குடும்ப நிலை ஆனதையா!
காலங்கடந்து சென்றதென்று
நாட்கள் நடந்து சொன்னதனால்
வருடம் ஒன்று ஆனதென்று
வந்து நின்றன நினைவலைகள்
இன்னொரு முறை எம்மிடையே
நீங்கள் வந்து தங்கிச் செல்ல
என்ன தவம் நாம் செய்ய,
கடைசியாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
இன்னும் மெல்ல ஒலிக்குதையா!
உன் உடலில்லா வாழ்க்கையிலும்
உயிர் இன்னும் நம்மிடையே
நீண்ட காலம் நர்த்தனங்க்கள் ஆடுதையா!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!
பத்து ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!