

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா காமாட்சி பாலசிங்கம் அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெனகாம்பிகை, ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயானந்தி(இலங்கை), ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயபாலன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(இலங்கை), ஜெயபிரதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயபாலி(ஜேர்மனி), உஷா(ஜேர்மனி), ஷண்முகப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), செல்வாஜினி, சிறிஅமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேர்மனியில் வசிப்பவர்களான பிரதீப், அனுஷியன், சுதர்சன், சுலக்ஷன், சுஜீவன், சுதர்ஷினி, செயந்துயன், ஜெனுஷன், ஜெய்ஷா மற்றும் துலக்சிகா, கீர்த்திகா, அபிநயா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.