10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி ஊரியானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா செல்வரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!!
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழிநடத்திய
அந்த நாள் எங்களை விட்டு
நீண்ட தூரம் சென்றாலும்,
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனை உறவுகளும் உங்களுக்கு ஈடாகுமா !?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanti