யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,சுன்னாகம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தாமோதரம்பிள்ளை அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நீலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், ரமணி, ரஜனி, காலஞ்சென்ற ரஜணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசையா, இராஜரட்ணம், இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வனஜா, சத்தியநாதன், மதிவர்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷரா, ரவண்யா, விஷாள், ஸ்டீவன்- புஜாங்கிதா, சஜானா, மஞ்சுரா, தாரேஸ், தக்சேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.