யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கிரிதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச்சுழற்சியில் ஈராண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!
பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்
எங்கள் குடும்ப விளக்காய்
எமக்கு நல்வழி காட்டி
உறுதுணையாக இருந்த நீங்கள்
இப்போது எம்முடன் இல்லை
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
Dear Rubika We join you and children in remembering Kiri on his second death anniversary. We all miss him. Balu Elayayah and Mathy Elayamma