யாழ். உடுப்பிட்டி இமையாணன் மயிலாவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை
எம்மால்
இப் பூமியில் உங்களை
நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் முதலாவது ஆண்டு சிரார்த்த தின கிரியை 01-07-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அதனைத்தொடர்ந்து மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:-
மயிலாவளவு,
இமையாணன் கிழக்கு,
உடுப்பிட்டி