Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1939
இறப்பு 11 OCT 2019
அமரர் சிங்கராயர் தார்சீசியஸ்
ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். புனித மரியாள் வித்தியாலயம் OLR
வயது 80
அமரர் சிங்கராயர் தார்சீசியஸ் 1939 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராயர் தார்சீசியஸ் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் சிங்கராயர் மரிய சலோமை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சொபியாவதனி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஆனந்(நோர்வே), நிஷாந்தினி, விமல்(VVMart and Construction உரிமையாளர்), தயானந்(பிரான்ஸ்), அருட்தந்தை நிரூபன்(தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்-ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோர்ஜ்(சுவிஸ்), ஜேன்பாமினி(நோர்வே), ஜொணிஎல்மோ(பிரான்ஸ்), ஜெயந்தினி,  லக்‌ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

திரேசம்மா, லூத்தம்மா, காலஞ்சென்ற யூலியானா, கீதபொன்கலன், மேரிஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அல்வினஸ், கிறிஸ்ரி, மரியநாயகம், மரியடீனா காமலின், ஞானமலர், பத்மராணி, சண்முகராஜா, சிவானந்தராஜா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டொனால்ட் றீகன்- பிரஷாந்தி(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆசிரியை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), கனிஷியோ றொஷேல்(மொறட்டுவ பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவி), ஏஞ்சலா(பிரான்ஸ்), நிரஞ்சலா(பிரான்ஸ்), கிஷான்(புனித பத்திரியார் கல்லூரி மாணவன்), கவின்(நோர்வே), சஞ்ஜெய்(பிரான்ஸ்), பிரவின்(நோர்வே), அஜய்(பிரான்ஸ்), மெல்வின்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று , குருநகர் தூய யாகப்பர் ஆலயத்தில் பி.ப 03:30 மணிக்கு  இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 09 Nov, 2019