Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1939
இறப்பு 17 AUG 2020
அமரர் சிங்கநாயகம் பரிமளம் 1939 - 2020 மாதனை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாத்தனையைப் பிறப்பிடமாகவும், மூர்த்தி வளவு, தெல்லிப்பழை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கநாயகம் பரிமளம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு  நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினி(கனடா), சாந்தினி(ஆசிரியை, யாழ் சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை), குமுதினி(தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கி), சிவகுமார்(கனடா), நந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைரட்ணம், தனலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிறிரங்கநாதன், கணேசமூர்த்தி, சிறிதரன், தாரணி(கனடா), சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிகிதன், டிலக்ஷன், டினோஷா, ரதீஸ், ஹரீஸ், ஜதுஷன், டினேஸ், கீர்த்திகா, தனுஸ், பிருத்திகா, சேயோன், கிஷோர், ஆத்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று  பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: சிவகுமார்(கனடா)