
யாழ். புத்தூர் கிழக்கு குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவநேசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தபோதரன்(கனடா), றமேஸ்தரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமு பவானி, பரமானந்தம் இராசம்மா, காலஞ்சென்ற சி. செல்லத்துரை, சின்னத்துரை, சி. சி.சிவராசா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற செ.கந்தையா(கந்தராஜா), செ. கருணானந்தம், செ.பரமசிவம்(கனடா), செ. பஞ்சலிங்கம்(கனடா), சுரேஸ் ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தபோதரன் யசிதா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சுரேஸ் நிதுஸா, சுரேஸ் ஜலிஸன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கியாசன்(கனடா) அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!