யாழ். நல்லூர் கோவில் வடக்கு வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா விஜய ஈஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புள்ள அம்மா
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
31 நாட்கள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல
உன் மரணமும் எங்கள்
குடும்பத்தை துண்டு
துண்டாக உடைத்தது
ஆனால் நம் உள்ளங்களில் இருக்கும்
உங்கள் இருப்பை முன்னோக்கி செல்வதற்கு
பலத்தையும் தைரியத்தையும்
எங்களுக்கு அளித்தது
எத்தனை நாட்கள் மாதங்கள் அல்லது
வருடங்கள் கடந்து இருந்தாலும்
நீங்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை
எப்போதும் முழுமையானதாக இருக்காது...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 14-10-2023 சனிக்கிழமை அன்று மு.ப 05.00 மணியளவில் வில்லூன்றி புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது நல்லூர் இல்லத்திலும் நடைபெறுவதோடு, கோவில் வீதி, நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் மு.ப 11.30 மணியளவில் நடைபெறும் அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.138/3,
நல்லூர் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதி,
(கோவில் வீதி) நல்லூர்,
யாழ்ப்பாணம்.