Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 JAN 1953
மறைவு 23 MAR 2023
அமரர் சிவநேசர் கமலாம்பிகை 1953 - 2023 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கிழக்கு (East London) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசர் கமலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண

கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்

பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??

வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய் தினம்
இருக்க வேண்டிகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்