10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஷர்மினி கதிர்காமு
B.sc - ஆசிரியை வ/இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்
வயது 29
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஷர்மினி கதிர்காமு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
என்னுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம்!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்