Clicky

பிறப்பு 20 OCT 1969
இறப்பு 14 JUN 2024
அமரர் சாந்தகுமாரி ஜெயராஜன்
வயது 54
அமரர் சாந்தகுமாரி ஜெயராஜன் 1969 - 2024 திக்கம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanthakumari Jeyarajan
1969 - 2024

சிரித்த முகம், கலகலவென்ற பேச்சும் யாரைப்பற்றியும் அன்பாகக் கரிசனத்துடன் பேசும் பண்பும் என்றும எம் மனதில் நிலைத்திருக்கும்! சத்திர சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் 'நன்றாக இருக்கிறேன் அண்ணி வழககம்போல் எல்லா வேலைகளும் செய்கிறேன், வெளியில் போகும் போது முகக்கவசம் அணிய வேண்டும்' என்று நீங்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியான குரலில் கூறியது இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது! அப்பாடா என்று நெஞ்சம் சற்றே ஆறி நிம்மதி அடைந்து ஆறுவதற்குள் இடி போல் வந்த சேதி கேட்டு இடிந்து போனோம் யாவரும்! ஆறுதல் யாருக்குச் சொல்வதெனத் தெரியாது தவிக்கின்றோம் காலமும் இறைவனும்தான் தேற்ற வேண்டும் யாவரையும்! இறைவன் உமது ஆன்மாவுக்கு தன் பாதக்கமலங்களில் அடைக்கலம் தரவும் குடும்பத்தினர்க்கு ஆறுதல் தரவும் வேண்டுகின்றோம்! மோகன் அண்ணா குடும்பம்

Tribute by
K. Mohandas family
Thikkam - Colombo
Sri Lanka
Write Tribute