

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தகுமார் மயில்வாகனம் அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்புள்ள பெரிய தாய்மாமனுக்கு கண்ணீர் அஞ்சலி
மீளாத்துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே மாமா
தாய்மாமன் என்ற உறவுக்கேற்ப, சிறுவயது முதல்,
கண்ணை இமை காப்பது போல், எம்மைக் காத்த மாமா
நன்மையிலும், முன்னேற்றத்திலும் எப்போதும் துணை நின்றீரே
உம் அன்பும், ஆதரவும் எப்போதும் எமக்குக் கிடைத்து வந்தது
எக்கருமம் ஆயினும், அதை சிறப்பாக, வேகமாக முடித்துகாட்டும்
சகலகலா வல்லவன் நீர்
அதனால் தானோ என்னவோ, மரணத்தைக் கூட
மிக வேகமாக ஏற்றுக்கொண்டீரோ
கலையாத நினைவுகளுடன்,
உதிரும் கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சித்து,
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகிறோம்
அஞ்சலியுடன்
உங்கள் அன்பு மருமக்கள்
லக்ஷனா சுதன், செந்தீசன் நிமோஜிதா
ஜீவனா மயூரன், வாகீசன்