
சிலாபம் பங்கதெனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் இராசசேகரம் அவர்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசசேகரம் விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமுத்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரவீந்திரன்(லண்டன்), விமலேந்திரன்(லண்டன்), ஜெயலஷ்மி(லண்டன்), கஜேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற பரமநாதன், கதிர்காமநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவசேனா, கேதாரகெளரி, நிமல்ராஜ்(லண்டன்), இரஞ்சினிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்யா, ரஞ்சனா, நிவேதா, நிலானி, நிதுஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-11-2018 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கிரியை நடைபெற்று அதனைத்தொடந்ந்து பி.ப.03:00 மணியளவில் மாதம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I love you so so much Aya, and I will never forget you. Thank you for the amazing memories. I hope you rest in peace.