3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகராஜா குணமணி
1944 -
2021
மண்டைதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜா குணமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள்
எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல்
காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!
பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே
நேசத்துடன்
எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அம்மா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி
விட்டு
எம்மை விட்டு போக
உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அம்மா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
எமது தாயாரின் இறிதிச்சேதிகேட்டு இரங்கலைத் தெரிவித்த உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்