Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 JAN 1945
இறப்பு 13 DEC 2022
அமரர் சண்முகநாதன் சோதிமலர்
வயது 77
அமரர் சண்முகநாதன் சோதிமலர் 1945 - 2022 மாதகல், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சோதிமலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த
என் மனைவியே எம் அம்மாவே!
மாமியே! அப்புச்சியே! அம்மம்மாவே!

பாசத்தின் சுமையோடு எம்மை
 இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்?

அம்மா நம்பவே முடியவில்லை
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம்
கழித்திட்ட பொழுதுகள்
இனி எப்போ வரும் அம்மா?

ஆணிவேராய் எம்மை காத்து
நின்ற தெய்வேமே
 விழுதுகள் நாம் விம்முகின்றோம்
நாட்கள் 31 ஆனாலும்
ஆறவில்லை எம் மனம்
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 14 Dec, 2022