1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகம் தேவதாஸ்
1945 -
2022
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இளவாலை மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் தேவதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 15-12-2023
அன்பின் உருவமானவரே,
நிலவாய் எங்கள் வாழ்வில் ஒளி வீசுனாய்,
என்றும் எம் இதயத்தில் அழியா உருவம்கொண்டு
எங்கள் அன்பு தெய்வமாய்
வலம் வந்தாய்,
என்றும் காண்போமோ உன் முகம்,
உன் முகம் காண
ஏங்கி தவிக்கிறது எங்கள் உள்ளங்கள்...
பாசமுள்ள அப்பாவே கடைசிவரை
எங்களுக்காய் ஓடி ஓடி உழைத்தீர்களே!
இளைப்பாறுதல் தர இறைவன்
உங்களை அழைத்து விட்டாரோ?
காலம் கடந்ததப்பா,
கவலைகள் ஓயவில்லை
வாய்மை வெல்லும் என்று
வாழ்ந்தவர் நீங்கள் அப்பா
எம் வாழ்வில் நீங்கள் இல்லை
என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில்
நாம் வாழும் காலம்வரை!
உங்கள் நினைவுகளைச் சுமந்து கண்ணீருடன்
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்